திடீரென கீழே விழுந்த விமானம்..மளமளவென பற்றிய தீ..!
அமெரிக்காவின் கலிபோர்ணியா மாகாணத்தில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த ஆறு பேரும் உயிரிழந்தனர்.
அந்த விமானம் பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையம் அருகே வயலில் விழுந்து நொறுங்கியதில் தீப்பிடித்து எறிந்தது. கார்ப்பரேட் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ஜெட் விமானத்தில் இருந்த 6 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.





