இன்ஸ்டாவில் ஆண்களுக்கு காதல் வலை விரித்து பணம், நகைகளை கொள்ளையடித்த பெண்..!
தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணத்துடன் மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
instagram-ல் போலி கணக்கை உருவாக்கி சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் மூர்த்தி என்பவருக்கு காதல் வலை வீசிய ரக்ஷிதா என்ற பெண் கடந்த மார்ச் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதையடுத்து கடந்த ஐந்தாம் தேதி ரக்ஷிதா திடீரென காணாமல் போனார்.
வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் 5 சவரன் நகை மாயமானதையடுத்து போலீசில் புகார் தெரிவித்தார். விசாரணையில் ரக்ஷிதா நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் என்பதும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா பல்வேறு மாநிலங்களில் இதுவரை எட்டு பேரை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு கோவை துடியலூரில் இவர் மீது வழக்கு பதியப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இன்ஸ்டாகிராம் மூலம் பல பெயர்களில் ஆண்களுடன் பழகிய ரக்ஷிதா ஆபாசமாக சாட்டிங் செய்து பின்னர் அதனை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.





