சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!
பெல்காம் மைசூர் விமானம் நிலையம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் 52 பேர் உயிர் தப்பியுள்ளனர். கர்நாடக மாநிலம் பெல்காம் இல் இருந்து மைசூர் செல்லவேண்டிய தனியார் பயணிகள் விமானம் திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
2ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க தயாரான போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் அவசரமாக தரை இறங்குவதற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அளித்து துரிதமாக செய்யப்பட்டது.
விமானம் பத்திரமாக தரை இறங்கியபோது பழுது காரணமாக விமானம் ஓடு பாதை பாதியிலேயே நின்றுள்ளது. இதனால் அந்த ஓடுபாதையில் மற்ற விமானங்கள் இறக்கவும் புறப்படவும் முடியாத நிலை ஏற்பட்டது.
விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் உட்பட 52 பேர் உயிர்தப்பினர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.







