வேல் யாத்திரைக்கு சென்ற போது கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகை குஷ்பு.. “எல்லாம் கடவுள் முருகனின் அருளாசி என நெகிழ்ச்சி!!”
மதுராந்தகம் அருகேநடிகை குஷ்பு சென்ற கார், முன்னால் சென்ற டிரக்கர் லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த குஷ்பு உள்ளிட்ட அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். வேல் யாத்திரைக்கு சென்ற நிலையில், முருகனின் அருளால் உயிர் தப்பியதாக குஷ்பு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த குஷ்பு அக்கட்சி நிகழ்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். பாஜக சார்பில் இன்று திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து காரில் குஷ்பு சென்று கொண்டிருந்தார். மதுராந்தகம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது முன்னாள் சென்ற டிரக்கர் லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதியது.இதில் கார் சேதமடைந்த போதும் காரில் இருந்த குஷ்புவும் மற்றவர்களும் சிறு காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் தப்பியது குறித்து குஷ்பு கூறுகையில், வேல் யாத்திரைக்கு செல்லும் வழியில் நடந்த இந்த விபத்தில் உயிர் தப்பியது கடவுள் முருகனின் அருளாசி தான் காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். தொடர்ந்து தாம் வேல் யாத்திரையில் பங்கேற்க உள்ளதாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார்.







