வானத்தில் நேருக்கு நேர் மோதி கொண்ட விமானம்..அதிர்ச்சியில் மக்கள்..!
இத்தாலியில் ராணுவ பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டது. பயிற்சி விமானம் மோதிக்கொண்டதில் பைலட்டுகள் இருவரும் உயிரிழந்தனர்.
இத்தாலியில் ரோம் நகரம் அருகே விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட பொழுது பயங்கர விபத்து நேர்ந்தது. இரண்டு விமானங்களும் நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. பின்னர் இரு விமானங்களும் தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தன.
பயிற்சி விமானத்தில் பயணித்த இரண்டு விமானிகளும் உயிரிழந்துவிட்டனர். காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக பிரதமர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.






