பாஜகவினர் அரைவேக்காட்டுத்தனமான செயலை செய்கிறார்கள் : கடம்பூர் ராஜு
கோவில்பட்டியில் பாஜகவினர் அரைவேக்காடுத்தனமான செயலை செய்துள்ளதாக கடம்பூர் ராஜு குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதற்றத்துடன் செயல்படுவதற்கான காரணம் தெரியவில்லை என்றார்.
அண்ணாமலையினால் பாஜகவினர் பலர் கட்சியை விட்டு வெளியேறி வருவதாக கூறியுள்ளார். அரசியலில் பக்குவப்படாத அண்ணாமலை வெறும் வாய் சொல்வீரராக மட்டுமே இருப்பதாகவும் கடம்பூர் ராஜு குறிப்பிட்டுள்ளார்.
கோவில்பட்டியில் பாஜகவினர் அரைவேக்காடுத்தனமான செயலை செய்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளவர் அண்ணாமலை அதிமுகவை எதிர்த்து அரசியல் செய்ய நினைப்பது கானல் நீராகத்தான் முடியும் என்று கூறியுள்ளார். கூட்டணியில் முடிவு செய்யும் அதிகாரம் அண்ணாமலைக்கு கிடையாது என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.






