--- --:--:-- --

2000 ரூபாய் நோட்டை வாங்க மாட்டேன் எனக்கூறி நிரப்பிய பெட்ரோலை உறிஞ்சி எடுத்த பெட்ரோல் பங்க் ஊழியர்..!

2

த்திரபிரதேசத்தில் 2,000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் இருசக்கர வாகனத்தில் நிரப்பிய பெட்ரோலை மீண்டும் உறிஞ்சி எடுத்துள்ளார். தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்ப ஒருவர் 2000 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.

 

அதை வாங்க மறுத்த ஊழியர் வாகனத்தில் இருந்த பெட்ரோலை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். சிறிய குழாய் மூலம் பெட்ரோலை உறிஞ்சி எடுத்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

 

2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறும் அறிக்கையை தொடர்ந்து வங்கியை தவிர பிற இடங்களில் அவற்றை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் இதுபோன்ற சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

 

Right Menu Icon