--- --:--:-- --

உயிருடன் குளிர்பதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட நபர் உயிரிழப்பு..!

9

சேலத்தில் உயிரோடு இருந்தவரை இறந்துவிட்டதாக கூறி குளிர் பதன பெட்டிக்குள் வைக்கப் பட்டு மீட்கப்பட்ட முதியவர் உயிரிழந்தார். சேலம் கந்தம்பட்டியில் வசித்து வந்த 78 வயதான பாலசுப்ரமணிய குமார் இறந்துவிட்டதாக கூறி குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்ட பின்னர் பெட்டியை எடுத்த போது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து அவர் மீட்க்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணிய குமார் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

 

இதற்கிடையே பாலசுப்பிரமணிய குமாரின் சகோதரர் சரவணன் மீது காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் உயிரிழந்த பாலசுப்பிரமணிய குமார் இறப்பதற்கு முன்பு எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் அவருக்கு இறப்பு சான்றிதழ் எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon