காதலித்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்..!
திருவள்ளூரில் காதலித்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் பிரேமலதாவும் சுதாகரும் 6 வருடமாக காதலித்து வந்த நிலையில் பிரேமலதா வுக்கு வேறு ஒரு நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுதாகர் உடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுதாகர் இன்று அதிகாலை பிரேமலதா வீட்டின் கழிவறை அருகே மறைந்து நின்று அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி உள்ளார்.
உடல் சரிந்து உயிருக்கு போராடிய பிரேமலதாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்.






