--- --:--:-- --

60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்…!

12.1

சென்னை அயனாவரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மூதாட்டியின் கணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நடக்க முடியாமல் படுக்கையாக இருக்கிறார்.

 

குடியிருக்கும் வீடு சிறியது என்பதால் அவ்வப்போது பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் படுத்து உறங்குவது வழக்கம். நேற்று வழக்கம் போல உறங்கச் சென்ற பொழுது வீட்டில் புகுந்த மர்மநபர் ஒருவர் அறையை பூட்டி மூதாட்டியை மிரட்டி வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

 

உடலில் ரத்த காயங்கள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மூதாட்டி உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். உறவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon