--- --:--:-- --

பெண் வேட்பாளருக்கு தனக்கு ஆபாச படங்களை அனுப்பும் நபர்..!

4.1

னக்கு ஆபாச படங்களை அனுப்பியதற்கு பல்லாவரம் சந்தையில் வைத்து தீர்ப்பு எழுதுவேன் என்று மை இந்தியா பார்ட்டி கட்சியின் வேட்பாளர் வீரலட்சுமி சபதம் எடுத்துள்ளார். தமிழர் முன்னேற்ற படையின் நிறுவனர் தலைவர் கி வீரலட்சுமி என்பவர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார்.

 

இவர் ராமபுரம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசித்து வருகிறார். சட்டசபை தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.கடந்த 17ஆம் தேதி இவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போதிலிருந்து வேட்பாளர் வீரலக்ஷ்மியின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பப்பட்டு வந்துள்ளன.

 

இதுதொடர்பாக பரங்கிமலை துணை கமிஷனர் இடத்தில் வீரலட்சுமி புகார் அளித்தார். அதில் அருவருக்கத்தக்க வகையில் அவர் தனது தேர்தல் பணியை தடுக்கும் வகையிலும் தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வருகின்றனர். எனக்கு இப்படி மன உளைச்சலை ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில் வீரலட்சுமி தமிழக டிஜிபி திரிபாதி தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சென்னை கமிஷனர் ஆகியோருக்கு வேண்டுகோள் விடுத்து வீரலட்சுமி விடுத்துள்ள வீடியோவில் தன் கைபேசி வாட்ஸ் அப்பில் தொடர்ந்து பல்வேறு வீடியோ காட்சிகளை அனுப்பி வருகின்றனர்.

 

சம்பந்தப்பட்டவர்களை மூன்று தினங்களுக்குள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் தானே சம்பந்தப்பட்டவரை பிடித்து பல்லாவரம் சந்தையில் நிர்வாணமாக கட்டி வைத்து தீர்ப்பு கொடுப்பேன் எனவும் அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என்று தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon