--- --:--:-- --

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு கேட்ட ஊழியர் சஸ்பண்ட்..!

5

சேலத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டதாக கூறப்பட்ட புகாரில் ஆத்தூர் நகராட்சி குடிநீர் குழாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் .சேலம் மாவட்டம் தம்மம்பட்டியை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவர் ஆத்தூர் நகராட்சியில் குடிநீர் குழாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

 

இவர் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் என்பவருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். ஓட்டு கேட்டு வீடு வீடாக சென்று திமுக ஆதரவு பிரசுரங்களையும் ஓட்டியுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது.

 

இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஆத்தூர் நகராட்சி குடிநீர் குழாய் ஆய்வாளர் சாகுல்ஹமீது சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon