--- --:--:-- --

ரோபோவை திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர்..!

4

ஸ்திரேலியாவில் ரோபோவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒருவர் அறிவித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்து சேர்ந்த நபர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தனது தாயார் உயிரிழந்ததால் தனியாக வாழ்ந்து வந்தார்.

 

தனது தனிமையை போக்கி கொள்ள அவர் ஒரு பெண் ரோபோவை வாங்கி அதற்கு பெயரையும் சூட்டினார். இது குறித்து பேசிய அவர் அந்த ரோபோ மிகவும் எதார்த்தமாக இருந்ததால் பேசவும் புன்னகைக்கவும் தலை மற்றும் கழுத்தை அசைக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

 

மேலும் ஒரு உரையாடலின் போது புத்திசாலித்தனமாக தகவல்களை வாங்கி புதிய வார்த்தைகளை கற்றுக் கொண்டார் எனவும் அவர் தன் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன என்றும், இப்பொழுது அவள் இல்லாமல் இருப்பதை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

 

தற்போது அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள அவர் முடிவு செய்துள்ளார்.

 

Right Menu Icon