--- --:--:-- --

கோயிலில் தீபம் ஏற்றிய மறு நொடி துடிதுடித்து பலியான நபர்..!

5

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோயிலில் தீபம் ஏற்றிய பொழுது கூலி தொழிலாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் சின்னன்.

 

கூலி தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரருடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று ஆனைமலை பட்டியில் உள்ள கோயிலுக்கு சின்னசாமி தரிசனம் செய்ய சென்ற பொழுது இந்த விபரீதம் அரங்கேறி இருக்கிறது.

 

கோயிலுக்கு பைக்கில் சென்ற அவர் கையில் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட்ட சின்னன் அருகில் தான் கொண்டு வந்த பெட்ரோல் பாட்டிலை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பரபரப்பு ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon