10 வயது சிறுமியை நாசம் செய்த நபர்..!
10 வயது சிறுமியை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டுள்ளது. சேலம் சரக துணை தலைவரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். அப்பொழுது இதை தடுக்க சென்று இரண்டு நபர்களையும் அவர் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில்குமாரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் செந்தில்குமாரை மனநோயாளி என கூறி காவலர்கள் காப்பாற்ற முயன்றதாகவும் செந்தில்குமார் சிறுமியை பாலியல் கொடுமை செய்ய முயன்றதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். எனவே செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்து. தங்களின் மகளின் மருத்துவத்திற்கு உதவ கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.





