விஜய் அமைச்சரவையில் முக்கிய மைல்கல்: பட்டியலின அமைச்சர்களுக்கே ஒதுக்கப்பட்ட 2 கல்வித்துறைகள்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில், கல்வி சார்ந்த இரண்டு முக்கியத் துறைகளும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பட்டியலினத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அமைச்சரவையில் உயர்கல்வித் துறையானது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பட்டியலின எல்.எம்.ஏ-வான பி. விஸ்வநாதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இரண்டு முக்கியப் பிரிவுகளும் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கே தற்போதைய அரசில் முழுமையாகக் கையளிக்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் உற்றுநோக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.





