மார்க்கெட்டில் உலா வந்த 7 அடி நீள மலைப்பாம்பு..!
ஒகேனக்கல் மீன் மார்க்கெட் பகுதியில் ஊர்ந்து சென்ற சுமார் 7 அடி நீளம் உள்ள மலை பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். ஆற்று வெள்ளத்தில் பாம்பு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என தெரிவித்த தீயணைப்புத் துறையினர் அதனை காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.






