கோமா நிலையில் இருந்த குழந்தையை விட்டு விட்டு சென்ற பெற்றோர்..!
கோமா நிலையில் இருந்த இரண்டரை வயது மகளை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து விட்டு காணாமல் போன பெற்றோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் மனைவி ஹேமலதா மற்றும் இரண்டரை வயது மகள் ஹாசினியுடன் தென்காசி மாவட்டத்தில் வசித்து வந்தார். டிசம்பர் 31ஆம் தேதி குழந்தை ஹாசினி தவறி விழுந்து விட்டதாக கூறி ஆலந்தூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
சிறுமி சுயநினைவு இன்றி இருந்ததால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த நான்கு நாட்களாக சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மருத்துவமனை வந்த குழந்தையின் பெற்றோர் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களை காவல்துறை தேடி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தை உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






