தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை வேக மாறுபாடு காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை முதலே லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.






