ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..!
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்திருந்தது.
ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஓபிஎஸ் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
அவசர வழக்காக விசாரிக்க முடியாது என தெரிவித்த நீதிபதி பொதுக்குழு விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை இன்று நடக்க ஒத்திவைத்தார். இதனையடுத்து இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.





