--- --:--:-- --

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது..!

4

கொரொனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் மக்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

 

டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர் நடந்த தடுப்பூசி முகாமில் 10 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நோய்தொற்று குறைந்து வருவதாகவும் இருப்பினும் மக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon