--- --:--:-- --

இன்று முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி..!

3

சென்னையில் இன்று முதல் கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கடைகளில் ஜனவரி 31ஆம் நாள் வரை பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

 

அதனால் மெரினா, பெசன்ட் நகர், கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தொற்றுகள் குறைய தொடங்கி இருப்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளதாலும் சென்னை கடற்கரைகளுக்கு பொதுமக்கள் இன்று முதல் செல்ல மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

 

இருப்பினும் கடற்கரைகளில் கூட்டம் போடக்கூடாது எனவும், மாஸ்க் அணிந்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon