பூஜைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கார்.. மறுநொடியே மாறிய தருணம்..!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பூஜை செய்வதற்கு கொண்டுவரப்பட்ட கார் கோயிலுக்குள் பாய்ந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சுதாகர் என்பவர் தான் புதிதாக வாங்கிய காரை ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள கோயிலுக்கு எடுத்து வந்தார்.
பூஜை முடித்த பிறகு அவர் காரை இயக்க முயன்ற பொழுது பிரேக் அழுத்தத்திற்கு பதில் ஆக்ஸிலேட்டரை வேகமாக அழுத்தியதாக தெரிகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டில் இருந்து 100 கால் மண்டபத்தில் மூழ்கி நின்றது.
இதை பார்த்த பக்தர்கள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். சுதாகர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.





