--- --:--:-- --

கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை.. நீதிபதியிடம் சவுக்கு சங்கர் பரபரப்பு முறையீடு..!

1

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீஸாரால் சவுக்கு சங்கரை கைது செய்தனர்.  அப்போது கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார்.

 

இந்த நிலையில், மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக சவுக்கு சங்கர் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

 

நீதிபதி செங்கமலச்செல்வன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்ற போது, கோவை சிறையில் 10 காவலர்கள் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும், கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை எனவும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்.

 

மேலும், மதுரை அல்லது தஞ்சை சிறைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். மேலும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் தன்னை அடைத்து வைத்திருந்ததாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து, மே 22 வரை 15 நாட்கள் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

 

அதனை தொடர்ந்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.இதனிடைய மதுரை நீதிமன்ற வாயிலில் சவுக்கு சங்கருக்கு எதிராக ஏராளமான பெண்கள்  துடப்பத்தை கையில் ஏந்தி காவல் வாகனத்தை சூழ்ந்து கொண்டு முழக்கமிட்டனர்.

Right Menu Icon