மனித வெடிகுண்டாக மாறி வங்கிக்குள் புகுந்த மர்ம நபர்..!
தெலுங்கானா மாநிலத்தில் வங்கிக்குள் புகுந்து பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர். கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
இங்கு புகுந்த நபர் ஒருவர் போலி வெடிகுண்டை காண்பித்து தனக்கு உடனடியாக இரண்டு லட்சம் கொடுக்க தவறினால் வெடிகுண்டை வெடிக்க செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
ஊழியர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.





