பின்லாந்தில் வானில் தோன்றிய அதிசய நிகழ்வு..!
பின்லாந்தின் அரியவகை சிவப்பு நிற வானவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் ஹெல்சின் கில்லில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பைஜான் டெவாஷ்டியா என்ற இடத்தில் ஏரியில் மீன் பிடிக்கும்போது மீனவர்கள் இந்த காட்சியை படம் பிடித்து உள்ளார். மழை பெய்ய தொடங்கியவுடன் சிவப்பு நிற வானவில் தோன்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண வான வில்லைப் போன்று இது தோன்றுவதாகவும் சூரிய உதயம் மற்றும் மறையும்போது வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் குறைந்த அலைநீளம் கொண்ட நீலம், பச்சை நிற கதிர்கள் சிதறடிக்கும் போது சிவப்பு நிற வானவில் உருவாவதாக அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.







