மதுராந்தகம் கூட்டம் தி.மு.கவை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டம் – எல்.முருகன்
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க. பாஜ.க இணைந்துள்ள என்.டி.ஏ கூட்டணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்த கட்சியின் பொதுக்கூட்டம் இன்று (ஜனவரி 23) செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டசபைதேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மீண்டும் ஆட்சியை பிடிக்க தி.மு.கவும், இழந்தை ஆட்சியை கைப்பற்ற அ.தி.மு.க.வும், களமிறங்கியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில, என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகி தேர்தலை சந்தித்த அ.தி.மு.க தற்போது மீண்டும் பா.ஜ.க.வின் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ளது. அதேபோல், அன்புமணியின் பா.ம.க, ஜி.கே.வாசனின் த.மா.க, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே ஆகிய கட்சிகளுடன் டிடிவி தினகரனின் அமமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த கூட்டணியில் இணைந்துள்ளன. இன்று நடைபெறும் என்.டி.ஏ பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.





