--- --:--:-- --

ஒரே நேரத்தில் பிறந்த 2 குழந்தைகள் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம்..!

8

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒரு பிரசவத்தில் வந்த இரண்டு குழந்தைகள் பெற்றோர்களுக்கு மாற்றி கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

 

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு அடுத்தடுத்த சிசேரியன் முறையில் குழந்தை பிறந்தது. அதில் ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை, மற்றொரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

மருத்துவமனை பணியாளர்கள் தவறுதலாக குழந்தையை மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆண் குழந்தை பிறந்ததாக கொடுத்த பெண்ணுக்கு குடும்ப கட்டுப்பாட்டு செய்யப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Right Menu Icon