--- --:--:-- --

காவலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்..!

7

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தோட்ட காவலாளி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பழனி அருகே உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்தவர் கும்பகோணத்தை சேர்ந்த கார்த்தி.

 

அவர் நள்ளிரவில் தோட்டத்தில் காவலில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது பணியில் ஈடுபட்டிருந்த கார்த்தி மீது துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்தது. மார்பு பகுதியில் கொண்டு பாய்ந்த நிலையில் கார்த்தி சுருண்டு விழுந்தார்.

 

உடனடியாக அங்கிருந்த அவர்கள் கார்த்திக்கை மீட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக இந்த துப்பாக்கி சூடு எதற்காக நடந்தது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon