ஆந்திராவில் போலீஸ் எனக்கூறி மக்களிடம் பணம் பறிக்க முயன்ற 4 பேர்..!
ஆந்திராவில் போலீஸ் என்று கூறி மக்களிடம் பணத்தை பறிக்க முயன்ற 4 பேரை மக்கள் மரத்தில் கட்டி வைத்து உதைத்த சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் வலம்வந்த நான்கு பேரும் போலீசார் என்று கூறி மக்களை மிரட்டி வந்துள்ளனர்.
மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி சென்று யாரையாவது மடக்கிப்பிடித்து போதை பொருட்களை விற்பனை செய்கிறாயா விசாரணை நடத்த வேண்டும் என்று போலியாக நடித்து மிரட்டி வந்துள்ளனர். அவர்களைப் பற்றிய உண்மை தெரிய வந்ததையடுத்து கிராம மக்கள் அவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.
சரமாரியாக அடித்த கிராம மக்கள் தங்களிடம் ஆயிரக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றி விட்டதாக கூறினார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்கள் அனைவரும் கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்று கூறினர்.






