--- --:--:-- --

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 86 சென்டிமீட்டர் அதிகரித்துள்ளது..!

9

நேபாள அரசு வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 86 சென்டிமீட்டர் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கடந்த 1954 ஆம் ஆண்டு அளந்து உலகுக்கு அறிவித்தது இந்தியா.

 

8,848 மீட்டர் என்று அந்த அளவு உலகின் பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியதா என விவாதம் எழுந்தது.

 

2019ஆம் ஆண்டு சீன அதிபர் ஜீ ஜின்பிங் நேபாளம் சென்ற நிலையில் இரு நாடுகளும் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மறு அளவு செய்வது என முடிவு செய்தனர். ஓராண்டாக நடந்த இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் சிகரம் 8848.86 மீட்டர் என நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon