--- --:--:-- --

மாணவனை கடுமையாக தாக்கி உடலில் காயம் ஏற்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்..!

4

ன்னியாகுமரியில் பத்தாம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கி உடலில் காயம் ஏற்படுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் பாட புத்தகத்தை கொண்டு செல்லவில்லை என கூறப்படுகிறது.

 

இதனால் கோபமடைந்த ஆசிரியர் மாணவனை பிரம்பால் கடுமையாக தாக்கியுள்ளார். உடலின் பல்வேறு பகுதிகளில் காயத்தோடு வீட்டிற்கு சென்ற மாணவன் பெற்றோரிடம் புகார் கூறவே வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மாணவனுக்கு நியாயம் கேட்டுள்ளார். தற்போது ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Right Menu Icon