இளம்பெண்களின் செல்பியில் இருந்த பேய்..!
இளம் பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட ஒரே ஒரு செல்பி அவரின் மொத்த தூக்கத்தையும் கலைத்துவிட்டது. இங்கிலாந்தில் கோவைன் என்ற இடத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இளம்பெண் வசித்து வருகிறார்.
இவரின் தோழி ஒருவர் அவரது வீட்டின் கீழே வசித்து வருகிறார். இந்நிலையில் இவர்களின் தோழிகள் சிலர் நீண்ட நாட்களுக்கு பிறகு அவரின் வீட்டிற்கு வந்து அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்த போது தோழிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அதன்பின்னர் தோழிகள் நின்று செல்பி எடுத்த போட்டோவை பார்த்த போதுதான் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. இதனிடையே புகைப்படத்தில் எட்டாவதாக ஒரு இளம்பெண் நீண்ட கரு நீள கூந்தலை விரித்து கொண்டு நிற்பதை கண்ட அவர் ஒரு நிமிடம் மூச்சு பேச்சில்லாமல் நின்றுவிட்டார்.
அதன் பிறகு தான் தெரிந்தது. ஏற்கனவே அவரின் வீட்டில் குளியல் அறையில் ஒரு பெண் இறந்து போனதாக அரசல் புரசலாக கேள்விப்பட்டு வந்த நிலையில் ஒரு பெண்ணின் முகத்தை புகைப்படத்தில் கண்டதிலிருந்து அவருக்கு தூக்கமே வரவில்லை.
இவையெல்லாம் அமானுஷ்ய சக்தி என அவர் நம்புகிறார். முன்னதாக அந்த வீட்டில் அவ்வப்போது ஏதாவது சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் என்றும், அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து சத்தம் வருகிறது என அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும் ஆனால் இப்போது உண்மையாகவே அந்த சப்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் இருப்பவர்களின் சத்தம் தானா என்பதே சந்தேகம் ஆகிவிட்டது.






