--- --:--:-- --

தமிழகத்தில் 50 லட்சம் மக்களின் ஆதார் விவரம் கசிந்துள்ளது.!

5

மிழகத்தில் 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் உள்ளிட்ட விபரங்கள் கசிந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை பொது விநியோகத் திட்ட இணைய தளத்திலிருந்து ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டிருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

ஜூன் 28-ஆம் தேதி இந்த ஆபத்து நடந்துள்ளதாகவும் 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள தாகவும் அந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

 

தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் மற்றும் குடிமக்களின் ஆதார் எண் பயனாளிகள், அவர்களது உறவினர்களின் விபரங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்கள் தரவுத்தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டதாக டெக்னீசியன் கூறியுள்ளார்.

 

தமிழ்நாட்டின் பொது வினியோகத்தில் இருந்து தரவுகள் ஹேக் செய்யப்பட்டதை தொடர்ந்து 50 லட்சம் மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon