யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இறங்கிய வெள்ளம்.. அலறியடித்து ஓடிய மக்கள்..!
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் திடீர் என ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பென்சில்வேனியாவில் உள்ள புறநகர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 175 மில்லி மீட்டர் மழை பெய்ததால் சாலையில் ஐந்து அடி உயரம் வரை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
எதிர்பாராமல் வெள்ளத்தில் அந்த பகுதி வழியாக சென்ற 11 கார்கள் சிக்கிக்கொண்டன. மேலும் சாலையில் கிடந்த இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.






