மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்..!
மீனவர்களுக்கான மீன்பிடி தடை கால நிவாரணம் 8000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடல், ஆம்புலன்சுகள் உள்ளிட்ட மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
உலக மீனவர் நாள் வெள்ளிவிழா கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நாட்டு படகுகளை இயந்திர படகாக்கும் திட்டத்தில் 24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு விரைவில் 8,000 ரூபாய் வழங்கப்படும் என்றார். மேலும் கணவரை இழந்த மனைவிகளுக்கு மேலும் மீன்பிடி தடை கால நிவாரணம் வழங்கப்படுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார் .





