வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணுக்கு சாலையிலேயே பிரசவம் பார்த்த மக்கள்..!
துணைக்கு யாரும் இல்லாத காரணத்தால் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணிப் பெண் சாலையிலே குழந்தையை பெற்றெடுத்தார்.
கர்ப்பிணிப் பெண் நேற்று மருத்துவமனைக்கு சென்ற சமயத்தில் அந்த பெண்ணுடன் யாரும் துணைக்கு இல்லை என்ற காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சாலையில் விழுந்து துடித்த பெண்ணை பார்த்த சிலர் போர்வைகளை வைத்து மறைத்து ஏற்படுத்தி பிரசவம் பார்த்துள்ளனர். அரசு விதித்துள்ள நிபந்தனைபடியே நாங்கள் செயல்பட்டோம் என்று அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.





