பள்ளி திறப்பு குறித்து முதல்வரே முடிவெடுப்பார்..!
தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்து கேட்கப்பட்ட பின் பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். பெற்றோர்களையும் மாணவர்களையும் கவனிக்கும் அரசே அதிமுக என்ற அடிப்படையில் நேற்றைய தினம் முதலமைச்சரை சந்தித்ததற்குப் பிறகு கல்வித்துறை செயலர் மூலமாக ஒவ்வொரு பள்ளியிலிருக்ககூடிய தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அவர் கூறினார்.
அவர்களின் கருத்துக்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் கூறியுள்ளார்.







