--- --:--:-- --

ராமநாதபுரத்தில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் காட்சி..!

12

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே கடற்பகுதியில் சுழல்காற்று தோன்றி மறைந்தது. வேதாளை கடலில் கருமேக கூட்டங்களுக்கு மத்தியில் சுழல்காற்று சிறிது நேரம் தோன்றியது. இதனை பார்த்த மீனவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

 

இந்த அதிசய நிகழ்வு குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு கடலின் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும் கடலின் காற்று சற்று வெப்பமாகவும் இருந்தால் இதுபோன்ற நிகழ்வு ஏற்படுகிறது. மேலும் இந்த நிகழ்வின் போது கடலின் நீர் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு மேகமாக மாறி விடும் எனவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon