இந்திய போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண்..!
உத்திர பிரதேசத்தில் தொலைக்காட்சி பழுது பார்க்கும் தொழிலாளியின் மகள் விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம் இந்திய விமானப்படையின் போர் விமானத்தை இயக்கும் முதல் இஸ்லாமிய பெண் என்ற பெருமையை சானியா மிர்சா பெற்றுள்ளார். இந்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 400 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
அதில் போர் விமானத்தை இயக்கும் இரண்டு பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டது. இதில் தனக்கான இடத்தை பிடித்து விட்டதாக மகிழ்ச்சியுடன் சானியா தெரிவித்துள்ளார்.





