8 வயது மகளை கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை.. தானும் உயிரை மாய்த்து கொண்டதால் பரபரப்பு..!
ஹரியானா மாநிலம் கீசாவில் எட்டு வயது மகளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாலா லஜபதிராய் கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் சந்திப் கோயில் நேற்று மாலை 4 மணியளவில் தனது மகளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார்.
ஆனால் வெகுநேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த மனைவி பல்கலைக்கழகத்திற்கு சென்று பார்த்த பொழுது கோயிலின் அலுவலகத்திற்குள் இருவரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.





