மகளிர் இலவச டிக்கெட்டுகளை கிழித்து எறிந்த ஓட்டுநர்..!
கர்நாடகாவில் மகளிருக்கான இலவச பேருந்து டிக்கெட்டுகளை கிழித்து அரசு பேருந்து நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் மகளிருக்கு இலவச பேருந்து வசதி அமல்படுத்திய நிலையில் அதிக அளவில் பெண்கள் பயணிக்குமாறு கணக்கு காண்பித்தால் நடத்துனர்கள் அதிகம் சம்பளம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் மகளிருக்கான இலவச டிக்கெட்டை நடத்துனர் ஒருவர் கிழித்து எரிந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதனை பெண் பயணி வீடியோவாக பதிவு செய்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் மகளிருக்கான இலவச பேருந்து டிக்கெட்டுகளை கிழித்த நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.





