--- --:--:-- --

தங்க சங்கிலியை விழுங்கிய நாய்..!

6

ங்க சங்கிலியை விழுங்கிய நாய் அது வெளியே வரும்வரை பின்னால் இருந்து வருகிறார் நாயை வளர்ப்பவர். கர்நாடக மாநிலத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருபவர் திலீப்குமார்.

 

இவரது குடும்பத்தினர் ஒரு நாய்க்குட்டியை மிகவும் செல்லமாக வளர்த்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு திலீப்குமார் தான் அணிந்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு சென்றுவிட்டார்.

 

பின்னர் கண்விழித்து தங்க சங்கிலியை வைத்த இடத்தில் பார்த்தபோது அது காணவில்லை. அதிர்ச்சியுடன் வீடு முழுக்க தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. குழம்பிப் போயுள்ளார். மீண்டும் மீண்டும் தங்கச்சங்கிலியை வைத்ததை நினைவுபடுத்திக் கொண்டு இருந்தபோது தனது வளர்ப்பு நாயின் அருகே சங்கிலியின் சின்ன சின்ன துண்டுகள் சிதறி கடந்துள்ளன. இன்னும் தங்க துண்டுகளை தேடியுள்ளார்.

 

அப்போது வந்த யோசனையின் பேரில் உடனே நாகை கால்நடை மருத்துவரிடம் தூக்கி சென்று இது பற்றிக் கூறியுள்ளார். மருத்துவரும் நாயை சோதித்துப் பார்த்து குட்டியாக இருப்பதால் ஆபரேஷன் செய்ய தேவையில்லை என்றும் நாயின் கழிவுடன் இதர துண்டுகள் தானாகவே வந்துவிடும் என்று நம்பிக்கையூட்டினார்.

 

எதிர்விளைவாக நாயும் கழிவை வெளியேற்றியது. ஆனால் ஒரு சில துண்டுகள் மட்டுமே வெளிவந்துள்ளன இன்னும் ரூபாய் 80 ஆயிரம் மதிப்பிலான மேற்பட்ட துண்டுகள் வர வேண்டிய நிலையில் அந்த நாயை வெளியில் விடாமல் திலீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon