சிவசங்கர் பாபா மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்..!
பாலியல் புகார் வழக்கில் தேடப்பட்டு வந்த சுசில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா டேராடூனில் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். தமிழ்நாடு சிபிசிஐடி காவல்துறையினர் டேராடூன் சென்று நிலையில் மருத்துவமனையில் இருந்து அவர் தப்பினார்.
போக்சோ வழக்கில் சிக்கி இருக்கக்கூடிய சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருக்கக்கூடிய தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரை விசாரிப்பதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேரடியாக டேராடூன் சென்று இருந்தனர். ஆனால் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.







