தீவிரவாதிகளுக்கு உதவிய மருத்துவர்..! என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்..!
பகலில் மருத்துவராகவும், இரவில் பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும் செயல்பட்டு வந்த நபரை பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு எம் எஸ் ராமையா மருத்துவமனையில் கண் மருத்துவ பிரிவில் பணியாற்றி வந்தவர் அப்துல் ரகுமான்.ஐ.எஸ் இயக்கத்தின் கிளை அமைப்பாக கருதப்படும் ஐஎஸ்கேபி என்ற இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம் அமைப்புடன் இவன் தொடர்பில் இருந்ததாக அப்துல் ரகுமானை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் இதே அமைப்புடன் தொடர்பிலிருந்த கஷ்மிர் தம்பதியினரை டெல்லி போலீசார் கைது செய்து இருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே அப்துல் ரகுமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியா சென்றவன் காயமடைந்த செய்ய ஐஎஸ்ஐ தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் ஆப் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் அப்துல்ரகுமான் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.







