உயிரிழந்த தவெக தொண்டர்.. உதவிக்கரம் நீட்டிய தலைமை!
விபத்தில் உயிரிழந்த தொண்டரின் குடும்பத்திற்கு தவெக தலைமை நிதியுதவி அளித்துள்ளது. மதுரை மாநாட்டில் பங்கேற்ற தஞ்சையை சேர்ந்த ஜெயசூர்யா வீடு திரும்பும் போது உயிரிழந்தார்.
இந்த நிலையில் மாவட்ட நிர்வாகிகள் ஜெயசூர்யாவின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு முதற்கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி, கூடுதல் உதவிகளை செய்ய தயார் எனவும் உறுதியளித்தனர்.





