--- --:--:-- --

உதவி பேராசிரியர் பணிகளுக்கான யுஜிசி நெட் தேர்வுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு..!

1

யுஜிசி நெட் தேர்வு எனப்படும் உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சி தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்றே கடைசி நாள். உதவி பேராசிரியர் மற்றும் தகுதி தேர்வை பல்கலைக்கழக மானிய குழு அறிவித்தது.

 

இதற்கு கடந்த 17 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினத்தில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்திருந்த காரணத்தினால், விண்ணப்பத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாமதங்கள் ஏற்பட்டதாக குற்றம் சாட்டினர்.

 

இதனால் விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி தேதியை தேசிய தேர்வு முகமை ஜனவரி 23ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்படி விண்ணப்பம் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon