--- --:--:-- --

ஸ்டாலின் இடைக்கால முதல்வர் தான் – அதிமுக முன்னாள் அமைச்சர்

6

ம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாள் விழா அதிமுக சார்பில தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெ்ற்றது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியது: அதிமுக என்று கூறி சிலர் வேஷம் போட்டு வருகின்றனர்;.நானும் ரௌடி தான் என்று நடிகர் வடிவேல் நகைச்சுவை காட்சியில் பேசுவது போன்று பேசி வருகின்றனர்.

 

சின்னம், கொடி, தொண்டர்கள் எங்களை விட்டு எங்கும் போகமாட்டார்கள். மக்களும் எங்கள் பக்கம் தான். எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் ஏற்றுக்கொண்டது போல, அவரை நாட்டு மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

 

ஈரோடு கிழக்கு தேர்தல் களம் ரெடி; வேட்பாளாரும் ரெடி. வேட்பாளரின் பெயரை எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார். அதிமுக கட்சி ஆரம்பித்து 100 ஆவது நாளில் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றது. இரட்டை இலை சின்னம் வந்தாலும், அது தாமதம் ஏற்பட்டாலும் ஈரோட்டில் வெற்றி பெற போவது அதிமுக தான். அன்றைக்கு திண்டுக்கல்; இன்றைக்கு ஈரோடு கிழக்கு.

 

மக்களை மட்டுமல்ல, சட்டமன்ற உறுப்பினர்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார். சட்டமன்ற தொகுதிக்கு 10 கோரிக்கைகள் கொடுத்த பிறகும் அதனை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மு.க.ஸ்டாலின் இடைக்கால முதல்வர் தான். ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வந்தால் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் என்று கடம்பூர் ராஜு பேசி உள்ளார்.

Right Menu Icon