--- --:--:-- --

சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்.. பூட்டிய வீட்டுக்குள் நடந்த மரணம்..!

7

மூத்த மராத்தி நடிகர் ஆன ரவீந்திரபகாஜினி புனேவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வந்தார். 75 வயதானவர் தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக புகார் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து அவரது வீட்டின் கதவை உடைத்து காவல்துறையினர் சோதனை செய்யவே ரவீந்திரன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். மூன்று நாட்களுக்கு முன் அவர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

 

உடற்கூறாய்விற்கு பிறகு அவரது உடல் குடும்பத்தினரிடம் இறுதி சடங்குகளுக்காக ஒப்படைக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரின் மரணம் தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. 77 வயதான அவர் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக திரை உலகில் பணியாற்றி வந்துள்ளார்.

 

Right Menu Icon