--- --:--:-- --

முகக்கவசம் அணியுமாறு கூறிய ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வாடிக்கையாளர்..!

2

ஜெர்மனியில் வாடிக்கையாளரை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்திய பெட்ரோல் பங்க் ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்டார். பெட்ரோல் பங்கில் அமைந்துள்ள மளிகை கடையில் 49 வயது நபர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார்.

 

அங்கு பணியில் இருந்த 20 வயது இளைஞர் அவரை முக கவசம் அணிந்து வருமாறு கூறியுள்ளார். ஒன்றரை மணி நேரத்தில் வீடு சென்று முகக்கவசம் அணிந்து கடைக்கு வந்த நபர் கவுண்டரில் பணம் செலுத்தும் நேரத்தில் முக கவசத்தை கழற்றி அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

அப்போது தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் ஒருமுறை சுட்டதில் 20 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரவு முழுக்க அந்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் மறுநாள் காலை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon